தபால் சேவை ஊழியர்களின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டி.பி மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஊழியர்கள் தொழிற்சங்க நடிவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தபால் சேவை ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தபால் சேவையை பாதுகாக்கவும், மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தடுக்கும் நோக்கிலும் தபால் சேவை ஊழியர்களை சேவைக்கு திரும்புமாறு அவர் ஊழியர்களை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

