காதலென்பது பெருவரம் அது பாலினங்களைக் கடந்தது என்பதனை மெய்ப்பித்திடும் வகையில் திருநங்கைகள் மற்றும் ஓர் பாலின ஈர்ப்பு கொண்ட மக்களுக்கு உரிமை அளித்திடும் வகையில், கனடா அரசாங்கம் ஏற்கனவே பல சட்ட மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில், ஒரு பாலின ஈர்ப்பு மக்கள் மற்றும் திருநங்கைகளுக்கு எதிராக, கடந்த காலங்களில் நடந்த தாக்குதல்களுக்கும் , சமூக அநீதிகளுக்கும் கனடா நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரப்படும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் ட்விட்டர் பக்கத்தில், “நவம்பர் 28 ஆம் தேதி, கனடா குடிமக்களிடையே சம உரிமை மற்றும் ஒற்றுமையினை பேணும் வகையில், திருநங்கைகள் மற்றும் ஒரு பாலின ஈர்ப்பு மக்களுக்கு எதிராக, கடந்த காலங்களில் நடந்த தாக்குதல்களுக்கும், சமூக அநீதிளுக்கும் நாடாளுமன்றம் மன்னிப்பு கோரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.