தன்னை கைது செய்யுமாறு கோரி பிரதி அமைச்சர் பாலித்த தெவப்பெரும புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தின் முன்னாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கு முன்னர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டமொன்றில் கலந்து கொண்ட புளத்சிங்கள பிரதேச சபையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதால் உண்ணாவிரதத்தை மேற்கொண்ட தன்னையும் கைது செய்ய வேண்டும் என கோரியே அவர் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
சுமார் நான்கு மணிநேரம் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.