தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் தலைப்பு மாற்றப்பட உள்ளதாம்.
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.
இந்நிலையில், நானே வருவேன் படத்தின் தலைப்பு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் புதிய தலைப்பை தயாரிப்பாளர் தாணு வெளியிடுவார் எனவும், அதோடு தலைப்பு மாற்றத்துக்கான காரணத்தையும் அவர் தெரிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.
http://Facebook page / easy 24 news