பான் இந்திய நட்சத்திர நடிகரான தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் ‘ இஷ்க் தேரே மே’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ ஓ காதலே..’ எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
பொலிவுட் இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மே’ எனும் திரைப்படத்தில் தனுஷ், கீர்த்தி சனோன், சுசில் தஹியா, மாஹீர் முஹிதீன், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
துஷார் கான்ட்டி ரே மற்றும் விஷால் சின்ஹா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை கலர் யெல்லோ மற்றும் டி சீரிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ காதலே..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் மஷுக் ரஹ்மான் எழுத, பின்னணி பாடகர் ஆதித்யா ஆர் கே பாடியிருக்கிறார். ஏ. ஆர். ரஹாமானின் மயக்கும் மெலோடியும் … மசூக் ரஹ்மானின் அர்த்தமுள்ள காதல் உணர்வுடன் கூடிய வரிகளும்… வசீகரிக்கும் ஆதித்யாவின் குரலிலும் வெளியாகி இருக்கும் இந்தப் பாடல்.. இளம் தலைமுறை இசை ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

