தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று புதன்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் 674 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இது வரையில் 67,342 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவை தவிர சோதனைகளின் பின்னர் 615 வாகனங்களில் பயணித்த 890 பேர் மேல் மாகாணத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 812 வாகனங்களில் பயணித்த 1,206 பேர் மேல் மாகாணத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.