தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி தனிநபர் சுதந்திரத்தை கட்டுப்படுத்திய சம்பவங்கள் கடந்தகால தமது ஆட்சியில் இடம்பெற்றது உண்மையாகும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உலகில் மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்புடனேயே நாங்கள் போரிட்டோம். எனவே தான் தனிநபர் சுதந்திரம் உள்ளிட்ட விடயங்களில் குறைபாடு ஏற்பட்டது. சில சந்தர்ப்பங்களில் நாங்கள் எல்லை மீறிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. குறிப்பாக ரத்துபஸ்வல மற்றும் கட்டுநாயக்க சுதந்திர வலயம் என்பவற்றில் நடைபெற்ற சம்பவங்களைக் குறிப்பிடலாம்.
இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறக் கூடாது. தேர்தல் காலங்களில் மேடைகளுக்கு தீ வைத்தனர். இவற்றை ஆராயும் போது ஒரு சூழ்ச்சியின் பின்னணியாகவே கொள்ள முடிகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தென் மாகாண உறுப்பினர்கள் சந்திப்பு நேற்று (15) அம்பலாங்கொடையில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.