Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அகதிகளை கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் இங்கிலாந்து

April 18, 2022
in News, World
0
அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆசிய நாடொன்றின் தூதரகம்?

இங்கிலாந்தில் தஞ்சமடையும் அகதிகளை கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் புதிய திட்டத்தை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருக்கிறார். இதன் மூலம் இங்கிலாந்தில் சிறிய படகுகள் வழியாக தஞ்சமடைபவர்களை அந்நாட்டிலிருந்து 6400 கிலோ மீட்டர் அப்பால் உள்ள ருவாண்டாவுக்கு இங்கிலாந்து அரசு அனுப்பயிருக்கிறது.

சட்டவிரோத புலம்பெயர்வை தடுப்பதற்கான நடவடிக்கையாக சொல்லப்படும் இதனை இங்கிலாந்து எதிர்க்கட்சியினரும் அகதிகள் நல செயல்பாட்டாளர்களும் ‘மனிதாபிமானமற்றது, மக்கள் பணத்தை வீணடிப்பது’ என கடுமையாக விமர்சித்துள்ளனர். அதே சமயம், இங்கிலாந்து மற்றும் ருவாண்டா ஆகிய இரு நாடுகளும் இத்திட்டத்தை பொருளாதார வளர்ச்சிக்கான கூட்டு ஒப்பந்தம் எனக் குறிப்பிட்டுள்ளன.

இது அகதிகளை வஞ்சிக்கும் திட்டம் எனக்கூறி இத்திட்டத்துக்கு எதிராக இங்கிலாந்து உள்துறை அலுவலகம் எதிரே நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தையும் நடத்தியிருக்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும் சிறிய படகுகள் வழியாக சுமார் 28 ஆயிரம் இங்கிலாந்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர், இந்த எண்ணிக்கை கடந்த 2020ல் 8500 ஆக இருந்தது.

கடந்த 2013ம் ஆண்டு இவ்வாறு தஞ்சமடையும் அகதிகளை வேறொரு நாட்டுக்கு அனுப்பும் செயலை முதன் முதலில் ஆஸ்திரேலிய அரசு தொடங்கியது. படகு வழியாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயல்பவர்களை ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்த மாட்டோம் எனச் சொல்லிய ஆஸ்திரேலிய அரசு, அகதிகளை அருகாமை தீவு நாடுகளான பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவில் உள்ள கடல் கடந்த தடுப்பு முகாம்களுக்கு அனுப்பியது.

இவ்வாறு அனுப்பப்பட்ட பல அகதிகள் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாகி இன்றும் நிச்சயத்தன்மையற்ற வாழ்வில் சிக்கியுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Previous Post

மக்கள் போராட்டத்தை அடக்க முற்படுவது அடிப்படை மனித உரிமை மீறலாகும்

Next Post

கே.ஜி.எஃப் 2 | திரைவிமர்சனம்

Next Post
கே.ஜி.எஃப் 2 | திரைவிமர்சனம்

கே.ஜி.எஃப் 2 | திரைவிமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures