Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தங்க நகைகள் அணிவதன் அறிவியல் உண்மைகள்

May 27, 2022
in News, மகளீர் பக்கம்
0
தங்க நகைகள் அணிவதன் அறிவியல் உண்மைகள்

பெண்களின் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்குத் தங்க நகை அணிவது தீர்வாகிறது. தங்க நகைகளை பயன்படுத்துவதில் உள்ள அறிவியல் நன்மைகளை நாம் இங்கே காணலாம்:

இயற்கையாகவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கான பொருளாக தங்கம் பயன்படுகிறது. பழங்காலத்தில் உடலில் காயங்களும், புண்களும் ஏற்பட்டால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்க தங்க நகையை பயன்படுத்தினார்கள்.

பெண்கள் தங்க நகைகள் அணிவதற்குப்பின்னால் பல அறிவியல் மற்றும் உடலியல் சார்ந்த நன்மைகள் அடங்கியுள்ளன. பெண்களின் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்குத் தங்க நகை அணிவது தீர்வாகிறது. தங்க நகைகளை பயன்படுத்துவதில் உள்ள அறிவியல் நன்மைகளை நாம் இங்கே காணலாம்:

உடல் வெப்பத்தை சீராக்குகிறது:

மனித உடலின் வெப்ப நிலை, சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ளும். இதனால் சிலருக்கு உடல் வெப்பம் அதிகரித்து பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. தங்க நகை அணியும்போது இயற்கையாகவே உடலின் வெப்பத்தை சீராக்குகிறது. உதாரணத்துக்கு, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உடல் வெப்பம் அதிகரிக்கும். தங்க நகை அணிவதன் மூலம் வெப்ப நிலையை கட்டுக்குள் வைக்க முடியும்.

காயங்களுக்கான சிகிச்சை:

இயற்கையாகவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கான பொருளாக தங்கம் பயன்படுகிறது. பழங்காலத்தில் உடலில் காயங்களும், புண்களும் ஏற்பட்டால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்க தங்க நகையை பயன்படுத்தினார்கள். இதன் மூலம் காயங்களும் குணமாகும், அவற்றால் ஏற்படும் நோய் தொற்றும் தடுக்கப்படும்.

வாதத்தை தடுக்கும் மருந்து:

வாத நோய் ஏற்படும்போது, விரல்களையும் கால்களையும் அசைப்பது சிரமமாக இருக்கும். தங்க நகை அணிவதன் மூலம் உடம்பில் நேர்மறை
சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல், வாதத்தால் ஏற்படும் அறிகுறிகளையும் கட்டுப்படுத்தும். சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் இதனை பயன்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார்கள்.

மனக்கவலையை குறைக்கிறது:

பெண்கள் அதிக அளவில் மனஅழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். பதற்றமும், பயமும் ஏற்பட்டு நீண்ட கால கவலையாக உருவாகிறது. தங்க நகைகளை அணிவதன் மூலம், அவர்கள் உடலில் ‘நேர்மறை சக்தி’ பரவுகிறது. இதனால் உடலில் அமைதியான நிலை ஏற்பட்டு ரத்த நாளங்களை சீராக்குகிறது.சுவாசக் காற்றை உடல் உறுப்புகளுக்கு சரி சமமாக அனுப்பி நல்ல மனநிலையை ஏற்படுத்துகிறது.

சருமத்தின் பராமரிப்பு:

சருமம் வயதாவதை தடுக்கும் எதிர்ப்பு சக்தியாக தங்கம் செயல்படுகிறது. பல அழகுசாதனப் பொருட்களிலும், சரும பராமரிப்புப் பொருட்களிலும் தங்கத்தை பயன்படுத்துகிறார்கள்.

மருத்துவ பயன்பாடு:

புற்றுநோயை கண்டுபிடிக்கவும் தங்கம் உதவுகிறது. மது போன்ற உடலுக்கு தீங்கு தரும் பொருட்களுக்கு அடிமையாவதைத் தடுக்க தங்கம் பயன்
படுத்தப்படுகிறது. தங்க நகை அணிவதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சீராகி, நரம்புகள் வலுவாகிறது. உதாரணத்திற்கு காதில் உள்ள நரம்பு கண்களுடன் இணைக்கப்பட்டிருப்பதனால் காதில் தங்க நகை அணிவதால் கண்பார்வை அதிகரிக்க உதவுகிறது.

அதுபோல, தங்க மூக்குத்தி அணிவதன் மூலம் குறிப்பிட்ட நரம்பு வலுவாகி பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைக்கிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் வயிற்றில் தங்க ஒட்டியானம் அணிவதால் வயிற்றுப் பகுதியில் நரம்புகள் வலுவாகி குழந்தை நலமாக பிறப்பதற்கு உதவுகிறது.

Previous Post

கணவர் மீது மோசடி புகார் கொடுத்த பிரபல நடிகை 

Next Post

தித்திப்பான தேங்காய் அல்வா

Next Post
தித்திப்பான தேங்காய் அல்வா

தித்திப்பான தேங்காய் அல்வா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures