கல்பிட்டி, ஆலங்குடா பகுதியில் தங்கம் என சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர் .
இந்த தொல்பொருட்களை வீடொன்றில் மறைத்து வைத்திருந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைது செய்யப்பட்டவர் கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர் .