இந்த அரசாங்கத்திலுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள 30 அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் காணப்படுவதாகவும் அவற்றை 2020 இல் அமைக்கப்படும் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ் விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர கூட்டு எதிர்க் கட்சியினால் டொப் -20 நிகழ்ச்சித் திட்டத்தை, டொப் -30 ஆக மாற்ற வேண்டி ஏற்பட்டுள்ளது. காரணம், அமைச்சரவையில் உள்ள 30 பேருக்கு எதிராகவும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. லஞ்ச ஊழல் முறைப்பாட்டு ஆணைக்குழுவுக்கு இதுவரையில் 13 முறைப்பாடுகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று எதிர்க் கட்சி செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.