வடக்கு மாகாண அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிராக டெனீஸ்வரன் தாக்கல் செய்துள்ள வழக்கு மீதான விவாதம் எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதிக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
வழக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டு, திகதியிடப்பட்டதுடன், வழக்கை விசாரிக்கும் புதிய நீதிபதிகள் ஆயமும் அறிவிக்கப்பட்டது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் குரே உள்ளிட்ட 7 பேர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிராக டெனீஸ்வரன் கடந்த ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். வழக்கை தள்ளுபடி செய்து மன்று உத்தரவிட்டிருந்தது. அதற்கு எதிராக உயர் நீதிமன்றில் டெனீஸ்வரன் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
டெனீஸ்வரன் தரப்பு நியாயத்தை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றில் புதிய நீதிபதிகள் ஆயத்தின் முன்னிலையில் வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இரு தரப்பு வாதத்துக்கு மார்ச் 9 ஆம் திகதியைக் குறித்து மன்று வழக்கை ஒத்தி வைத்தது.