டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் இரகசிய குறியீடுகளையும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் புலம் ஒன்றில் சேமித்துள்ளதால் சிலரது இரகசிய இலக்கங்கள் டுவிட்டரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தெரிந்துவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கோளாறை டுவிட்டர் நிறுவனம் கண்டுபிடித்து சரிசெய்துவிட்டது. எனினும் பாதுகாப்புக்காக இரகசிய இலக்கங்கத்தை மாற்றிக்கொள்ளுமாறு அனைத்து பயனாளர்களுக்கும் டுவிட்டர் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்த கோளாறு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் இனிமேல் இது போல் நடக்கமால் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டுவிட்டர் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.