டுபாய் சுத்தா என அழைக்கப்படும் பாதாள கும்பலைச் சேர்ந்த பிரசாத் சதுரங்க கோத்தாகொடவின் நெருங்கிய நண்பன் ஒருவர் பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 4,665 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
டுபாய் சுத்தாவால் வட்ஸ்அப் ஊடாக ‘ஈஸி கேஷ்’ (Easy Cash) முறையில் இயக்கப்படும் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.