நவம்பர் மாதம் கிழக்கு சீனாவில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தில் டிராகன் படகு உலக கோப்பை போட்டி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான டிராகன் படகு போட்டி ஹாங்காங்கில் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான டிராகன் படகு உலக கோப்பை போட்டி நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கும் என்றும், யுன்ஜூ மாவட்டத்தில் உள்ள டாங்கியான் ஏரியில் போட்டி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் உலக நாடுகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட முன்னணி டிராகன் படகு போட்டி அணிகள் பங்கேற்க உள்ளன. உலக அளவில் டிராகன் படகு போட்டியை கொண்டு செல்லவும்,ஒலிம்பிக் போட்டியாளர்களை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

