பாக்.கிற்கு நிதியுதவியை அமெரிக்கா அதிபர் டிரம்ப் நிறுத்தியதாக அறிவித்ததையடுத்து பாக்.கிற்கான அமெரிக்க தூதருக்கு பாக். சம்மன் அனுப்பியுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்க அரசு நிர்வாகம் நிதியுதவியை வழங்கி வந்தது. இந்த நிதியை பாக். பயன்படுத்தாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் நேற்று டுவிட்டரில் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார், அதில், .பாகிஸ்தானுக்கு அமெரிக்கா, கடந்த, 15 ஆண்டுகளில், 2.10 லட்சம் கோடி ரூபாயை நிதி உதவியை முட்டாள்தனமாக வழங்கி வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை அழிக்கும் நமது நடவடிக்கைகளுக்கு எந்த உதவியும் செய்யாமல், அவர்களுக்கு புகலிடம் அளித்து அமெரிக்க தலைவர்களை முட்டாள்கள் என்று நினைத்துள்ள பாகிஸ்தான், பாக்.,கிற்கு இனி நிதியுதவி கிடைக்காது என அறிவித்தார்.
பாக். பிரதமர் அலறல்
டிரம்ப்பின் இந்த அதிரடி அறிவிப்பால் அலறிப்போன பாக். பிரதமர் ஷாகித் அப்பாஸி, தேசிய பாதுகாப்பு குழுவை கூட்டி ஆலோசனை நடத்தினார். பின்னர் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து பாக். வெளியுறவு அமைச்சகர் குவாஜா ஆசிப் அளித்த பேட்டியில், டிரம்ப் கூறியது உண்மைக்கு மாறானது. அமெரிக்க வழங்கிய நிதியை பகிரங்கமாக கணக்கு காட்ட தயார் என்றார்.
அமெரிக்க தூதருக்கு சம்மன்
இந்நிலையில் பாக். வெளியுறவு செயலர் டெஹமினா ஜான்ஜூவா பத்திரிகைகளுக்கு பேட்டியில், டிரம்ப்பின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரத்தில் பணியாற்றி வரும் பாக்.கிற்கான அமெரிக்க தூதர் டேவிட் ஹாலேவுக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளதாக பாக். வெளியுறவு செயலாளர் டெஹமினா ஜான்ஜூவா பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.