அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பிலான மசோதா மீதான செனட் சபை விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக சர்தேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த தீர்மானம் ஏற்கனவே பாராளுமன்றத்தின் கீழவையான மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானமே செனட்டுக்கு வரவுள்ளது.
அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட டிரம்ப் முடிவு செய்துள்ளார். அவரை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் போட்டிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள 3 ஆவது தடவை இதுவாகும் எனவும் கூறப்படுகின்றது.

