காசாவில் டிரம்புக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பாலஸ்தீனை சேர்ந்த இரண்டாவது நபர் பலியாகியுள்ளார்.
ஜெருசேலம் நகரை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க தூதரகத்தையும் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேம் மாற்றுவதாக அறிவித்தார். அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
உடனடியாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு பிரிட்டன், பிரான்சு ஜெர்மனி, ஸ்வீடன் ஆகிய நாடுகளின் ஐநா தூதர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிக்கையில், “ அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பிராந்தியத்தில் அமைதிக்கான சாத்தியக்கூறுக்கு உதவாது” என்று தெரிவித்து இருந்தனர்.
இதற்கிடையில், அமெரிக்காவின் அறிவிப்புக்கு எதிராக காசா நகரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வடக்கு காசா முனையில் நடைபெற்ற போராட்டத்தில் காயம் அடைந்த மகேர் அடல்லா(54வயது) என்பவர் உயிரிழந்தாக காசா சுகாதாரத்துறை மந்திரி அஷ்ரப் அல் கத்ரா தெரிவித்துள்ளார். முன்னதாக, எல்லையோர பகுதிகளில் நடைபெற்ற மோதலில் மற்றொருவர் பலியானது.