யாழ்ப்பாணம் தென்மராட்சி மிருசுவில் உசன் பகுதியில் டிப்பர் வாகனமும் -மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற டிப்பர் வாகனமும் முகமாலை பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

