போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த சோதனையின் போது, ஜெ., அறையில் சோதனை செய்யும் திட்டமில்லை என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெ., அறையில் சோதனையா?
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடத்துவதற்கு இரு ‘வாரன்ட்’ மட்டும் தயாரிக்கப்பட்டது. ஜெ., உதவியாளர் பூங்குன்றன் அறைக்கு ஒன்றும், சசிகலா பயன்படுத்திய இரு அறைகளுக்கு மற்றொன்றும் பயன்படுத்தப்பட்டது. ஜெயலலிதா அறைகளில் சோதனை செய்ய நாங்கள் திட்டமிடவில்லை. அதனால் தான் கோடநாட்டிலும் நாங்கள் நுழையவில்லை. ஜெ., வீட்டில் சோதனையிடுவதற்கு முன் அங்குள்ள அறைகளின் சாவியை இளவரசி மருமகனும், ஷகிலாவின் கணவருமான ராஜராஜனிடம் தான் வாங்கினோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.