Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜெனீவாவில் ஒரு குழு பிரதிநிதித்துவம் செய்வதே சிறப்பானது

March 14, 2019
in News, Politics, World
0

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு அமர்வில் இலங்கை சார்பில் இரண்டு குழுக்கள் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை முன்வைப்பதிலும் பார்க்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான ஒரு குழு பிரதிநிதித்துவம் செய்வதே சிறப்பானதாக அமையுமென ஜனாதிபதி நம்புவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எம்.பி. மஹிந்த சமரசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கைத் தரப்பில் ஒரு குழுவை பிரதிநிதித்துவம் செய்வதற்கு ஜனாதிபதி இறுதித் தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம மற்றும் வடமாகாண ஆளுநர்ஆகியோர் ஜெனீவா செல்வரென்றும் அவர் குறிப்பிட்டார்.

அதுதொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே இத்தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குழுத் தலைவராக செயற்படும் அமைச்சர் திலக் மாரப்பன எதிர்வரும் 21 ஆம் திகதி ஜெனீவாவில், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கருத்துக்கள் அடங்கிய கூட்டறிக்கையை இலங்கை சார்பில் முன்வைப்பாரென்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

இரண்டாவது விசேட நீதிமன்றம் இன்று திறப்பு

Next Post

இன்று வரவு செலவுத் திட்ட 2 ஆவது குழுநிலை விவாதம்

Next Post

இன்று வரவு செலவுத் திட்ட 2 ஆவது குழுநிலை விவாதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures