ஜெனிவா அமர்வில் இலங்கை விவகாரம் எதிர்வரும் 16ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜெனிவாப் பயணம் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மையக் குழுக் கூட்டத்தில், கூட்டமைப்பு சார்பில் ஒரு குழு ஜெனிவாவில் பங்கேற்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஜெனிவாவில் இடம்பெறும் பக்க மாநாடுகளில் இவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், இந்தக் குழுவின் பயண ஏற்பாடுகள், பக்க அமர்வுகளில் கலந்து கொள்ளும் ஒழுங்குகள் என்பன இன்னமும் இறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரியவருகின்றது.
இலங்கை விவகாரம் எதிர்வரும் 16ஆம் திகதியும், 21ஆம் திகதியும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதேவேளை, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜெனிவாவுக்கு ஏற்கனவே பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.