கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் கீழ் நாளாந்தம் ஜீவனோபாயம் இல்லாமல் பாதிக்ப்பட்ட நபர்கள் உள்ளிட்ட மேலும் சில பிரிவினருக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த வேலை திட்டத்திற்கான கலந்துரையாடல் இன்றைய தினம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தலைமையில் சமூக பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
இந்த கொடுப்பனவினை பெற்றுக்கொள்ளவுள்ள நபர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை நாளை மற்றும் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படும் என்பதோடு கொடுப்பனவு எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் வழங்கப்படும் என உரிய பிரிவினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

