Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

ஜி.எஸ்.பி. பிளஸ் நீக்கப்பட்டால் மீனவர் சமூகமே பாதிக்கப்படும் – சுமந்திரன்

June 14, 2021
in Sri Lanka News
0

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைத் தடைசெய்யுமாறு  ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அது  விரைவில் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் மீனவர் சமூகமே பாரியளவில் பாதிக்கப்படப் போகின்றது.

என்று தமிழ்த் தேசிய  கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கப்பலொன்றால் ஏற்பட்ட தாக்கம் மோசமாக எமது நாட்டைப் பாதிக்கப்போகின்றது. பொருளாதார ரீதியில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தவுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியில் மீனவர் குடும்பங்கள் தொழில் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இவ்வாறான நிலையில் மேற்கு கடற்கடை மீனவர்கள் அங்கு தொழில் செய்ய முடியாத நிலையில் அவர்களை வடக்கு,கிழக்கு பகுதிகளில் தொழில் செய்ய முயற்சிகள் நடைபெறக்கூடும்.

இந்த விடயத்தில் மீன்பிடித்துறை அமைச்சர் என்பவர் நாட்டில் எந்தப் பகுதியில் மீனவர்களுக்கு இடர் ஏற்பட்டாலும் அவர் அதனைக் கவனிக்க வேண்டும்.

அதனை விடுத்து கப்பல் பிரச்சினை வந்திருப்பதன் காரணமாக வடக்கு, கிழக்கு மீனவர்கள் வருவாயை கூட்டிக்கொள்ளலாம் என அவர் கூறுவது பொறுப்பற்ற ஒரு கூற்றாகும்.

எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு மீனவர்களையும் இது பாதிக்கும்.ஏனைய இடங்களில் தொழில் செய்ய முடியாதவர்கள் இங்கு வருவதற்கான நிலை உருவாகும். அதனை அவரே கொண்டு வந்து நிறுத்தி விடுவார்.

ஆகவே, மீன்பிடித்துறை அமைச்சர் தமிழ் மக்களுக்கான அமைச்சர் எனச் சொல்லிக்காட்டுவதும், அவ்வாறான ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவதும் தவறான ஒரு விடயமாகும்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது,

2015 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் அகற்றப்படுகின்றது என்ற வாக்குறுதியின் பெயரிலேயே ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீள வழங்கப்பட்டிருந்தது.

இப்போது நான்கு ஆண்டுகள் கடந்தும் பயங்கரவாதத் தடைச் சட்டம்  நீக்கப்படாத காரணத்தால்  ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை தடைசெய்யுமாறு கூறியுள்ளனர்.

அது விரைவில் நடைமுறைக்கு வரும். இதனால் பெரியளவில் பாதிக்கப்படப்போவது மீன் ஏற்றுமதியே. இதனால் மீனவர் சமூகத்துக்குப் பாரிய பாதிப்பு ஏற்படும் – என்றார்.

Previous Post

தொடர் முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

Next Post

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,198 பேர் கைது!

Next Post

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,198 பேர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures