ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு நாளைய (28) தினம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை இணைத்துக் கொள்வதற்கான திட்டமொன்று இருந்ததாகவும், அக்கனவு தற்பொழுது நிராசையாக மாறியுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, இப்போழுது அக்கட்சியில் ஜி.எல்.பீரிஸும், பசில் ராஜபக்ஷவும் மாத்திரமே அங்கம் வகிப்பதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன், இன்னுமொருவர் இருக்கிறார். அவர் தான் வலல்லாவிட பிரதேச சபையின் முன்னாள் தலைவர். அக்கட்சியுடன் அதிகமாக இருப்பது ஊழல் மோசடியில் ஈடுபாடுள்ளவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்