அட்லீ
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் சிஷ்யன் என்ற அடையாளத்தோடு கொஞ்சம் பழைய கதை என்றாலும் அதனை தூசி தட்டி புதுவிதமாக ராஜா ராணி என்ற படத்தை இயக்கி முக்கிய இயக்குனர் என்ற பெயர் பெற்றவர் அட்லீ.
முதல் படத்திலேயே ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த அட்லீ தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர் வெற்றிகளை கொடுத்தார்.
தளபதியை வைத்து மாஸ் ஹிட் படங்களை கொடுத்துள்ள அட்லி இப்போது பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவான ஜவான் திரைப்படத்தை இயக்க அட்லீ ரூ. 32 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அட்லீயின் சொத்து
மோஸ்ட் வாண்டட் இயக்குனராக மாறிய அட்லீ அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராகவும் மாறி உள்ளார்.
படத்துக்கு படம் பல கோடி சம்பளம் பெற்றுவரும் அட்லீயின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 42 கோடி வரை இருக்கும் என்கின்றனர்.