ஜல்லிக்கட்டு விஷயத்தில் எல்லை மீறும் விஜய், அஜித் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் விஜய், அஜித் தான். இவர் படத்தை சாதனையை அவர் முறியடிப்பார், அவர் படத்தின் சாதனையை இவர் முறியடிப்பார் என்பதே மாறி மாறி நடந்து வருகின்றது.
இந்நிலையில் நாட்டில் எந்த பிரச்சனை நடந்தாலும் விஜய், அஜித் ரசிகர்களிடன் சண்டை நிற்காது போல, அவை ஒரு சில விஷயங்களில் எல்லை மீறி செல்கின்றது.
சமீபத்தில் கூட விஜய் ரசிகர்கள் அஜித் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தரவில்லை என்றும், அஜித் ரசிகர்கள் விஜய் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தரவில்லை என்று போட்டோஷாப் செய்து இணையத்தில் பரவவிட்டுள்ளனர்.
படம் வரும் போது ஒருவர் படத்தை ஒருவர் கிண்டல் செய்வது வேறு, இதுப்போன்ற சென்ஷிட்டிவான விஷயங்களில் கூட விஜய், அஜித் ரசிகர்கள் இப்படி நடந்துக்கொள்வது பலருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது.