ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு டார்லி பாதையிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்துக்கு நேற்று (02) விஜயம் செய்துள்ளார்.
புதிய வருடத்தில் கட்சி தலைமையகத்தின் பணிகளை ஆரம்பிக்கவும், கட்சி தலைமையக ஊழியர்களைச் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கவுமே ஜனாதிபதி கட்சித் தலைமையகத்துக்கு வருகை தந்ததாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கட்சித் தலைமையத்தில் செயற்குழுவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால, மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மூடப்பட்டுள்ளதாகவும், கட்சியின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.