ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிப்பார் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான அழுத்தத்தை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இதுவே எம்முன் உள்ள பிரதான பணி எனவும் தெஹிவளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கும் அதிகாரம் மஹிந்த ராஜபக்ஷவுக்கே உரியது என நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.