Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி வெளியிட்டுள்ள மீலாத் தின செய்தி

November 20, 2018
in News, Politics, World
0

பிரபஞ்சத்தின் அனைத்து படைப்புகளும் குறித்தவொரு நோக்கத்தினை நிறைவேற்றுவதற்காகவே படைக்கப்பட்டுள்ளன என்பதே புனித அல்குர்ஆனின் கருத்தாகும். இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பியுள்ள மீலாத் தின வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மனிதனும் ஒரு குறித்த நோக்கத்துடனேயே படைக்கப்பட்டுள்ளான். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக காலத்திற்கு காலம் இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நபிமார்களின் தொடரில் இறுதியாக அனுப்பப்பட்டவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள். மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே.

இனம், குலம், நிறம் போன்ற எந்தவொரு விடயத்திலும் ஒருவர் மற்றவரை விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்ல என்பதே அவரது போதனையாக அமைந்தது. அனைத்து மனிதர்களுக்கும் சமமான உரிமை கிடைக்கப்பெற வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் போதித்தார். பெண் பிள்ளைகளின் பிறப்பினை சாபம் எனக் கருதிய ஓர் அஞ்ஞான யுகத்தில் பெண் சிசுக்கள் பிறந்தவுடனேயே உயிருடன் புதைக்கப்பட்டனர். நபி அவர்களே அந்த அஞ்ஞான யுகத்தினை முடிவுறுத்தி பெண்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்தினார்.

தனது முழு வாழ்வையும் அடிமைச் சமூகத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்த நபி அவர்கள், சுரண்டலுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். தொழிலாளர்களின் வியர்வை காயும் முன்னரே அவர்களுக்கான கூலி குறைவின்றி கொடுக்கப்பட வேண்டுமென அவர் போதித்தார்.அவர் தனது தனிப்பட்ட வாழ்வில் கடைப்பிடித்த நற்பண்புகள் மற்றும் மனிதநேயத்திற்கான அவரது அர்ப்பணிப்புகள் ஆகியன மனிதர்களுக் கிடையில் பிரிவினைகளும் குரோதமும் வளர்ந்து காணப்படும் இக்காலத்தில் எம் அனைவருக்கும் சிறந்த முன்மாதிரியாக அமை கின்றன.

அனைத்து உயிரினங்களின் மீதும் அன்பு செலுத்த வேண்டுமென்ற நபி அவர்களின் தத்துவம் எம் அனைவரினதும் அன்றாட வாழ்க்கை நடைமுறைக்கு வழிகாட்டுவதாக அமையவேண்டுமென நபி அவர்களின் இந்த பிறந்த தினத்தில் நான் உளப்பூர்வமாக பிரார்த்திக்கின்றேன்.

இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தினருக்கும் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள மீலாத் தின செய்தி

Next Post

சபாநாயகர் குறித்து சர்வதேசத்தில் முறையிட தீர்மானம்- டளஸ் எம்.பி

Next Post

சபாநாயகர் குறித்து சர்வதேசத்தில் முறையிட தீர்மானம்- டளஸ் எம்.பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures