ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி கிரியையில் கலந்துக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சனிக்கிழமை ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜப்பான் அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியில் இடைநிறுத்தப்பட்ட ஜப்பானின் இலகு ரயில் அபிவிருத்தி செயற்திட்டத்தை மீள ஆரம்பிக்க அவதானம் செலுத்திவுள்ளார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த மாதம் 08 ஆம் திகதி பொது வெளியில் இடம்பெற்ற அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போது துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்தார். அவரது இறுதி கிரியை அரச மரியாதையுடன் எதிர்வரும் 27 ஆம் திகதி ஜப்பானில் இடம்பெறவுள்ளது.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி கிரியையில் கலந்துக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிய முடிகிறது.
ஷின்சோ அபேவின் இறுதி கிரியையில் கலந்துக்கொள்ள ஜப்பானுக்கு வரும் அரச தலைவர்களுடனும், இராஜதந்திரிகளுடனும்,உயர்மட்ட தலைவர்களுடனும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தையினை மேற்கொள்ளவுள்ளதாகவும், ஜப்பானின் நிதியுதவியுடன் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட இலகு ரயில் திட்டம் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியில் இடைநிறுத்தப்பட்டது.இந்த அபிவிருத்தி செயற்திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு ஜப்பான் அரசாங்கத்துடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிய முடிகிறது.
1.5 பில்லியன் டொலர் ஜப்பானிய நிதியுதவியுடனான இலகு ரயில் திட்டத்தை நிறுத்துமாறும்,திட்ட அலுவலகத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடுமாறும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ 2020ஆம் ஆண்டு உரிய தரப்பினருக்கு அறிவித்ததை தொடர்ந்து இலகு ரயில் திட்டம் இடைநிறுத்தப்பட்டது.