பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு சார்பாக வாக்களிக்கும் எந்த ஒருவரும் அரசாங்கத்தில் இருக்கத் தகுதியற்றவர்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்ஷா தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்கவுள்ளதாகவும், ஜனாதிபதியும் இதே கருத்தில் காணப்படுவதாகவும் ஸ்ரீ ல.சு.க.யின் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமரின் அமைச்சின் கீழ் இருந்த பொறுப்புக்கள் பலவற்றை நிதி அமைச்சின் கீழ் மாற்றுவதற்கு எடுத்த தீர்மானமும் ஜனாதிபதியின் கருத்தையே பிரதிபளிப்பதாகவும் சுசில் பிரேம்ஜயந்த் மேலும் குறிப்பிட்டுள்ளார்.