ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 500 தினங்கள் மாத்திரமே இருப்பதாகவும் என்ன தந்திரங்களைக் கையாண்டாலும் இந்த அரசாங்கம் குறித்த தினத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தியே ஆக வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திப் போடுவதற்கு தற்பொழுதுவரையிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
