ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ கண்டிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அதற்கமைமய அவர் இன்று காலை கண்டிக்கு விஜயம் செய்யும் அவர், ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். அதனைத் தொடர்ந்து அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் பீடாதிபதிகளையும் சந்திக்கவுள்ளார்.
அதன் பின்னர் மெனிக்ஹின்ன வூரிகடுவ பிரிவெனவுக்கும் சென்று ராமஞ்ஞ பீடத்தின் மகாநாயக்க தேரர் நாபானே பிரேமசிறி தேரரையும் சந்தித்து ஆசிப்பெறவுள்ளார்.
அதேபோல் ஜனாதிபதி இன்று மாலை கெடம்பே ராபோஜசாச விகாரைக்கும் சென்று அந்த விகாரையின் விகாராதிபதி கெப்படியாகொட பிரிவிமல தேரரரையும் சந்தித்து ஆசிபெறவுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.

