இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு (ஏப்ரல் 21) தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக ஆணைக்குழுவினால், விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய சற்று முன்னர் அவர், ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை விசாரணைப் பிரிவில் முன்னிலையானதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், நேற்றைய தினம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து, கொழும்புக்கு அழைத்துவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

