ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்கவைப் பற்றி எழுதவுள்ள புத்தகத்துக்கு மண்வெட்டி அல்லது கால் மாட்டு எனப் பெயர் சூட்டிக் கொள்ளட்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் கூறினார்.
கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவை பற்றி புத்தகம் ஒன்று எழுதப் போவதாக நேற்று அறிவித்திருந்தார். அவர் எழுதும் புத்தகத்திற்கு நாம் பெயர் வைக்கத் தயாராகவிருக்கிறோம்.
எமது அரசாங்க காலத்தில் நாம் முடியுமான அளவு திட்டங்களை மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும், கல்வி மேம்பாட்டுக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும் முன்னெடுத்தோம். இந்த திட்டங்களையெல்லாம், ஜனாதிபதி எமது காலினால் இழுக்கும் போதே நாம் முன்னெடுத்தோம் எனவும் அவர் மேலும் கூறினார்.