ஜனாதிபதியினால் கடந்த 26 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட சதிகார நடவடிக்கை இன்று வரையில் ஒரு புற்றுநோற் போன்று ஆபத்தான நிலைக்கு வந்துள்ளதாக நீதியான சமூகத்துக்கான தேசிய வேலைத்திட்டத்தின் ஏற்பாட்டாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தையும் அரசியல் யாப்பையும் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் நேற்று (21) ஆரம்பமாக சத்தியாக்கிரக நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அரசியல் யாப்பை குப்பையில் போட்டுவிட்டு தவறான ஒரு ஆட்சியை கொண்டு செல்ல ஜனாதிபதி எடுக்கும் பிரயத்தனத்துக்கு பொது மக்கள் அனைவரும் பாதையில் இறங்கி தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

