மக்கள் விடுதலை முன்னணி எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட திசைகாட்டிச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டணி அமைத்த அத்தனை சக்திகளுடனும் ஒன்றிணைந்தே எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலை முகம் கொடுக்கக் கூடிய திட்டங்களை ஒழுங்கமைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

