ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் கட்டுப்பணத்தை அதிகரிக்கும் சட்ட மூலம் ஒன்றைத் தயாரிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, அரசியல் கட்சியொன்றிடமிருந்து அறவிடப்பட்ட 50 ஆயிரம் ரூபாவை, 26 லட்சம் ரூபாவாகவும், சுயாதீன வேட்பாளர் ஒருவரிடமிருந்து அறவிடப்பட்ட 75 ஆயிரம் ரூபாவை, 31 லட்சம் ரூபாவாகவும் அதிகரிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
உத்தேச கட்டுப்பணத்தில் ஒரு லட்சம் ரூபாவை மாத்திரம் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு மீளவும் திருப்பிச் செலுத்தும் நிபந்தனையின் கீழ் அறவிடப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

