ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.
தேர்தலில் கட்டுப்பணம் செலுத்தியுள்ள 41 பேரில் இரண்டு தமிழர்களும், நான்கு முஸ்லிம்களும், இரண்டு பெண்களும் அடங்குவதாகவும் கூறப்படுகின்றது.
இன்றைய தினம் தேர்தல் திணைக்களப் பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

