எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலருடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட தகுதியான வேட்பாளர், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.