ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தெரியாமல், சட்டம் ஒழுங்கு அமைச்சில் இருந்த 19 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சுக்கு அண்மையில் நியமனம் பெற்று வந்த உதவிச் செயலாளர் ஒருவரினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
19 பொலிஸ் அதிகாரிகளும் குறித்த அமைச்சுக்கு அவசியமற்றவர்கள் எனத் தெரிவித்து பொலிஸ் தலைமயகத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அரசாங்கமொன்று இல்லாத நிலையில் இடமாற்றம் செய்வது சட்ட முரண் என்ற நிலையிலும் இவர் இந்த இடமாற்றத்துக்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்படுகின்றது.
சட்டம் ஒழுங்கு அமைச்சில் தற்பொழுது இடம்பெற்று வரும் முறையற்ற நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகும் என்ற அச்சத்தினாலேயே இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

