டில்லியில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் லட்சுமி அகர்வால். அவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் சப்பாக். பாஜிராவ் மஸ்தானி, சென்னை எக்ஸ்பிரஸ், பத்மாவதி போன்ற படங்களில் வித்தியாசமான நடிப்பை கொடுத்த தீபிகா படுகோனே லட்சுமி அகர்வாலாக நடித்துள்ளார்.
தீபிகா படுகோனே உடன் விக்ராந்த் மாஷி நடித்துள்ளார். மேக்னா குல்சார் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர் . ராஸி படத்தை இயக்கிய மேக்னா குல்சார் இயக்கியுள்ளார் .
இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா அருமையாக நடித்திருக்கிறார். வருகிற ஜனவரி 10-ந் தேதி திரைக்கு வருகின்றது .

