நாட்டில் அறிவிக்கபடாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் சரத்யாதவ் கூறினார்.
பீஹாரில் முதல்வர்நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஐக்கிய ஜனதா தள கட்சியில் இருந்து விலகிய சரத் யாதவ் புதிய கட்சி துவங்க திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி, ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பேச்சுரிமை, மத உரிமை உண்டு. ஆனால் அதற்கு பேராபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. சிறுபான்மையினர் எல்லா நிலைகளிலும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
அரசியலமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியாகத்தான் நான் இதை பார்க்கிறேன். மொத்தத்தில் நாட்டில் அறிவிக்கபடாத நெருக்கடி நிலை ஏற்படுவதை போன்ற நிலை உள்ளது.
வருங்காலத்தில் காங். தலைவர் ராகுல் மெகா கூட்டணி அமைப்பதற்கான திறமை உள்ளது.