பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாவிட்டாலும் ஜனநாயகத்தால் எதனையும் வெற்றிக் கொள்ள முடியும் என்பதை கடந்த நான்கரை வருடங்களில் நிரூபித்து காட்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையின்றி பல்வேறு பணிகளை எம்மால் முன்னெடுக்க முடியுமாக இருந்தால் பெரும்பான்மை கிடைத்தால் இதனைவிட பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.
வெள்ளை வேன் கலாசாரத்தினூடாக ஜனநாயக இலக்குகளை அடைய முடியாது. சகலருடனும் ஒற்றுமையாக செயற்படுவதினூடாகவே இலக்குகளை அடைந்துக்கொள்ள முடியும்.
கட்டட நிர்மாணங்களை மேற்கொண்டது போன்று மறுபுறம் ஜனநாயகத்தையும் படிபடியாக கட்டியெழுப்பியுள்ளோம். கடந்த அரசாங்கத்தால் இந்த அரசாங்கத்துக்கு அதிகளவான கடன் சுமையையே கொடுக்க முடிந்தது. சுமைகளின் மத்தியில் ஆட்சியை பொறுப்பேற்று கொண்டிருந்தாலும் சவால்களை பொருட்படுத்தாமல் சிறந்த வெற்றி இலக்குகளை அடைந்துக்கொள்ள கூடியதாக இருக்கிறது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
குறைந்த வருமானம் பெரும் 3300 குடும்பங்களுக்கு வீடுகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாடரங்கில் பிரதமர் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.