Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சொல்வதைத்தான் செய்வேன் :மகிந்த

August 12, 2019
in News, Politics, World
0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு நேற்றையதினம் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இம் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச,

‘ஐக்கிய தேசியக் கட்சி எங்களுக்கு எதிரான வாக்குகளை பெற்று கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது. அதன்பின்னர் அனைத்து விடயங்களிலும் நாடு பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் இப்போது மீண்டும் நாட்டை நாங்கள் பொறுப்பெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளளதாகவும்,

நாங்கள் மீண்டும் பொறுப்பெடுக்கப்போவது 2015 நாம் அவர்களிடம் கொடுத்த நாட்டை அல்ல. 2005 ஆம் ஆண்டு நாங்கள் பதவிக்கு வந்தபோது நாடு எப்படி இருந்ததோ அப்படித்தான் தற்போதும் நாடு இருக்கின்றது.

ஆம். எம்மால் முடியும். மீண்டும் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். 2005 ஆம் ஆண்டு பதவிக்கு வந்தபோது முப்பது ஆண்டு கால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. ரயில்களில் சுதந்திரமாக கொழுப்புக்கு வரமுடியும் என்று வடக்கு மக்கள் யாரும் நினைக்கவேயில்லை. டக்ளஸ் தேவானந்தா மட்டும்தான் நம்பிக்கையுடன் வந்திருந்தார் எனவும்

கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளை அபிவிருத்தி செய்ய முடியும் என்று யாரும் நம்பவில்லை. ஆனால் அத்தனையையும் எம்மால் செய்ய முடிந்தது. அதேபோன்று எதிர்காலத்திலும் எம்மால் நாட்டுக்கு தேவையான அனைத்தையும் செய்ய முடியும்.

சிங்களவர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து இன மக்களும் தங்களது வழிப்பாட்டுத் தலங்களில் அச்சமின்றி தங்களுடைய மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் ஏற்படுத்துவோம் எனவும் யாழ்ப்பாணத்தில் நூலகம் எரிக்கப்பட்டமை உட்பட ஐக்கிய தேசியக் கட்சியினர் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளே, தமிழர்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியதாகவம் மேலும், வடக்கு(தமிழ்) மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையீனங்களை களைய வேண்டும்.

தமிழர்கள் இந்த நாட்டில் அனைத்து உரிமைகளையும் பெற்று சமஉரிமைகளோடு வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழில் தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தான் தமிழ் தலைவர்களை போன்றவன் அல்ல. செய்வதைதான் சொல்வேன் சொல்வதைத்தான் செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் தலைமைகளுடன் இணைந்து இந்த நாட்டில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவோம்’ என மேலும் தெரிவித்தார்.

Previous Post

கோத்தபாயவை எதிர்த்து ஆட்சிக்கு வரவுள்ளவர் இவர்தான் ?

Next Post

மீண்டும் ரீஎண்ட்ரியான வனிதா மிரண்டு போய் பார்த்த போட்டியாளர்கள்

Next Post

மீண்டும் ரீஎண்ட்ரியான வனிதா மிரண்டு போய் பார்த்த போட்டியாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures