Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சொகுசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 8 பேர் பலி

September 1, 2018
in News, Politics, World
0
சொகுசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 8 பேர் பலி

சேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு தனியார் பேருந்துக்ள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த கோர விபத்தில் உடல் நசுங்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள மாமாங்கம் என்ற பகுதியில் இன்று அதிகாலை இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. பெங்களூரை நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்தும், பெங்களூரில் இருந்து வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 20க்கு மேற்பட்டோர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டதுடன், விபத்து குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த சேலம் கலெக்டர் ரோகிணி சம்பவ இடத்துக்கு நேரில் சென்றார். அங்கு நடைபெற்ற மீட்பு பணிகளை ஆய்வு செய்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

Previous Post

தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு அறவிடப்படும் கட்டணம் அதிகரிப்பு

Next Post

இலங்கை மின்சார சபைக்கு 49 பில்லியன் ரூபா நட்டம்

Next Post
இலங்கை மின்சார சபைக்கு 49 பில்லியன் ரூபா நட்டம்

இலங்கை மின்சார சபைக்கு 49 பில்லியன் ரூபா நட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures