பலமான ஆட்சி அமைப்பதற்கு மற்றவர்களுடன் சேர்ந்து இயங்க வேண்டியிருந்தால் அதற்கு நாங்கள் தயார். ஆனால் எந்தக் கட்சியுடன் கூட்டுச் சேர்வது என்பது தொடர்பில் ஆலோசித்தே செயற்படுவோம்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது-,
பலமான ஆட்சி அமைப்பதற்கு மற்றவர்களுடன் சேர்ந்து இயங்க வேண்டியிருந்தால் அதற்கு நாங்கள் பின்னிற்க மாட்டோம். மக்கள் நலன்கருதி மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவை கருதி, ஒற்றுமையை நாங்கள் ஊக்குவித்து, அதிகாரம் உள்ள ஆட்சியை அமைப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைக்கு பின்நிற்க மாட்டோம்.
ஆனால் எந்தக் கட்சியுடன் கூட்டுச் சேர்வது என்பது பற்றி நாங்கள் கவனமாக ஆலோசிப்போம். எமது கொள்கைக்கு மாறான கட்சியாக அது இல்லாமல் இருக்கவேண்டும் – என்றார்.