பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களில் மிக குறைந்த வருமானம் பெறும் பெண்களின் வாழ்வாதரத்தை உயர்த்தும் பணியில் கல்முனை SERVO அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் கல்முனை சேனைகுடியிருப்பில் கடந்த 19 ஆம் திகதி காலை10.30மணியளவில் SERVO பணிப்பாளர் திரு.க.சத்தியநாதன் அவர்களின் தலைமையில் நெசவு உற்பத்தி நிலையம் ஒன்று திறந்து வைக்கப்படுள்ளது.
இந்த கைத்தொழில் நிலையமானது வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

