தற்பொழுது நாட்டில் அனைவரினதும் பேசுபொருளாக மாறியுள்ள “சேனா படைப்புழு” இலங்கைக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட சோள விதைகளுடன் வந்திருக்கலாம் என விவசாயத் திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பல்தேசியக் கம்பனிகள் மூன்றின் ஊடாக நாட்டுக்கு சோள விதைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த பல்தேசியக் கம்பனிகளில் ஒன்று தனது தனி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த சேனா படைப்புழுவின் முட்டைகளுடன் சோள விதைகளை கொண்டு வந்துள்ளதாக திணைக்களத்தின் உள்ளக வட்டார தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த 2018 ஆம் ஆண்டில் 1200 மெட்ரிக் டொன் சோள விதைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த சோள விதைக்குள் கொண்டுவரப்பட்ட சேனா படைப்புழுவின் முட்டைகள் திணைக்களத்தின் நோய் கண்டறியும் பிரிவினால் கண்டறிய முடியாமல் போனமைக்கான காரணம் குறித்து கண்டறியப்பட வேண்டும் என்ற கருத்து விவசாய திணைக்களத்தில் எழுந்துள்ளதாகவும் இன்றைய தேசிய சகோதர நாளிதழொன்று திணைக்கள வட்டாரங்களை மேற்கோள்காட்டி அறிவித்துள்ளது.

